இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதல்!!

496

Par6792127

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

முதலாவது போட்டியில் 12 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது.

இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 20-20 தரவரிசையில் 1ஆம் இடத்தை இழக்க நேரிடும்.