
பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுகாதார திட்டத்தை வெற்றி பெறச் செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், உங்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதியுங்கள். ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் இதை அமுல்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் அபராதம் விதிக்கும் நடைமுறையை 10 முதல் 15 நகரங்களில் அமுல்படுத்துங்கள்.
பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபராத திட்டத்தை அமுல்படுத்தும் முன்பு, நகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் கழிவறை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.





