
வெளிநாட்டுப் பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை-ராகம்வெல கடற்பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த வேளை குறித்த பெண்ணை விமானப்படை சிப்பாய் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.இதன்போது குறித்த படை சிப்பாயிடமிருந்து தப்பி வந்தப்பெண் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து ராகம்வெல பிரதேச கடற்படை முகாமில் பணிப்புரியும் 30 வயதான விமானபடைச் சிப்பாயை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.மேலும் குறித்த சந்தேகநபரை இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





