வவுனியாவில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!!

630

Minnal

வவுனியாவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தவேளை மாமடுவ அக்போவவ பகுதியைச் சேர்ந்த நிமால் சந்திரசிறி (வயது 48) என்ற நபரே மின்னல் தாக்கி எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினமும் மின்னல் தாக்கத்தில் வவுனியா காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் பலியாகியுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.