
டேரன் சமி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.
T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இந்நிலையில் டேரன் சமி கிரிக்கெட்வாரியத்தைப் பற்றி பேசியது 100 சத வீதம் சரியானது என்று சக வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் குறிப் பிட்டுள்ளதாவது,
”டேரன் சமி கிரிக் கெட் சபையை பற்றி பேசியதற்கு நான் 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறேன். நாங்கள் சிரமப்படுவது உண்மை தான். மேலும், நல்லவேளையாக பரிசுத் தொகை கிடைத்தது. கிரிக்கெட் சபை ஊதியம் தருவதாக கூறுவது எல்லாம் ஒரு நகைச்சுவைதான் என்று கூறியுள்ளார்.





