ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் – மேஷம்

637

mesha

“மேட முயற்சி’’ என்பதற்கேற்ப எந்த காரியத்திலும் முதலில் சில தடைகளை சந்தித்து பின் விடாமுயற்சியால் வெற்றிகளை குவிப்பீர்கள். எதிர்பா ராத அலைச்சல், வீண் விரயங்களுக்கு மத்தியில் சிறந்த பலன்களை அடைவீர்கள். குரு, புதனின் வீட்டில் இருந்து உங்களது களத்ர ஸ்தானத்தை பார்க்கிறார். தம்பதிகளுக்குள் இருந்த மனக் கசப்புகள் குறையும். ராசியில் இருக்கும். கேது வீணான குழப்பங்களை தந்தாலும் ராசிநாதனின் சஞ்சாரத் தால் அதெல்லாம் மறையும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள்.

வக்ர சனியின் பார்வையால் சிற்சில விஷயங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் உங்களது மன வலிமையால் அனைத்தையும் சாதகமாக்கிக் கொள்வீர்கள். நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். சமுதாயத் தில் அந்தஸ்துமிக்க பதவிகளை பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து முடிவெ டுப்பீர்கள். தடைப்பட்டிருந்த விஷயங்கள் மடமடவென்று நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். பணியின் நிமித்தமாக வெளியூர்களில் இருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

அலுவலகத்தில் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்த்து வெற்றிகரமாக நிறைவேற்றி நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபத்தில் குறைவிருக்காது. போட்டிகளை சமாளிக்க முடியும். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடத்துப் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. மாணவ மணிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:

14, 15, 16 போன்ற நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:

தினந்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ககாடரூபாயை நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை கூறுங்கள்.

சிறப்புப் பரிகாரம்:

அறுகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சாற்றி வழிபடவும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருக்கவும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி,
தேய்பிறை : ஞாயிறு, புதன், வெள்ளி.