சிறைச்சாலைகளில் கடும் இட நெருக்கடி: சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

425

jail-cell-prison

இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இலங்கை முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளையும் ஒன்றிணைத்தால் சுமார் எட்டாயிரம் கைதிகளை அடைத்து வைக்கும் அளவுக்கே இடவசதி உள்ளது. கொழும்பில் உள்ள சிறைகளில் மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கான இடவசதி உள்ளது.

எனினும் தற்போது சுமார் 18 ஆயிரம் வரையான கைதிகள் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 7000 பேர் வரையானோர் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகவே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.