இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இளைஞர் கைது!!

472

arrest

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சுற்றுலா பயணியாக சென்னை வந்த இலங்கையை சேர்ந்த கோபிநாத் (35) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்தநிலையில் அவர் கொண்டு வந்த பையில் தலா ஒரு கிலோ கொண்ட 5 தேயிலை பாக்கெட்டுகளையும் பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 13 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதையடுத்து அதிகாரிகள், தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கோபிநாத்தின் கடவுச்சீட்டை ஆய்வு செய்தபோது, அவர் பலமுறை இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து சென்றது தெரிந்தது.

இதனால், அவர் இதுபோன்று பலமுறை தங்கத்தை கடத்தி வந்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், தீவிரமாக விசாரிக்கின்றனர்.