வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

506

Th

சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் மலரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிறக்கும் இப்புத்தாண்டுஅனைத்து மக்களுக்கும் வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நலமான உறவும் பெருவாழ்வும் எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் கிடைத்திடவேண்டும் எனவும் நாம் அனைவரும் இறைவனைப் பிராத்திப்போம் எனவும் நாம் செய்யும் காரியங்களும் எமக்கு வெற்றியைத் தருவது மட்டுமல்லாமல் மனநிறைவுடன் சந்தோசத்தையும் அளிக்கும் ஆண்டாக மிளிரவேண்டும் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள்சேவையில்..

மயில்வாகனம் தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்