விலை பொறி அமுல்படுத்தப்படாத காரணத்தினால் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வு!!

448

prescription_2496644b

மருந்துப் பொருட்களுக்கான விலைப் பொறிமுறைமை அமுல்படுத்தப்படாத காரணத்தினால் மருந்து வகைளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

மருந்துப் பொருட்ளுக்கான விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படும் என சுகாதார அமைச்சு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் விலைப்பொறிமுறைமை ஒன்று இதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லை.2012ம் ஆண்டில் மருந்துப் பொருட்களுக்கான சந்தை விலைகளை நிர்ணயிக்கும் விலைப் பொறிமுறைமையை அறிமுகம் செய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் தேசிய ஒளடதங்கள் அதிகார சபையோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையோ விலை பொறிமுறைமை அறிமுகம் செய்யவில்லை.இலங்கையில் விலைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாத காரணத்தினால் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. சில மருந்து வகைகள் 200 வீத உயர்வினை பதிவு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை 2012ம் ஆண்டில் இலங்கையின் சுகாதார அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.