முதியவரின் ஆசையை நிறைவேற்றிய இளவரசர்

658

prince-williams-kate-boman-kohinoor-india

மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் போமென் கோகினூர்.93 வயதான இவர் மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.இந்த ரெஸ்டாரன்ட் மும்பைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமானது.

தன்னை பிரிட்டன் அரச குடும்பத்தின் நம்பர் 1 ரசிகன் கூறிக் கொள்ளும் போமென், இரண்டாம் ராணி எலிசபெத்தின் உருவப் படத்தை மாட்டி வைத்துள்ளார்.மேலும் தனக்கு ராணி எழுதிய கடிதத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியா வந்திருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்திக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.இதனை அறிந்த நிறுவனம் ஒன்று வீடியோவாக தயாரித்தது, இதனை #WillKatMeetMe என்ற ஹாஷ்டேக்கின் மூலம் இணையதளவாசிகள் வைரலாக்கினர்.

இதனையடுத்து கடந்த 10ம் திகதி போமெனுக்கு திடீரென அழைப்பு வந்தது, தாஜ் ஹொட்டலில் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை சந்தித்து பேசினார்.இதுகுறித்து போமென், இளவரசரை சந்தித்தேன், அவர்கள் மிக அன்பானவர்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.