ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி!!

634

Dead

அத்தனகலுஓய ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே ஆற்றின் இரண்டு இடங்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நிட்டம்புவ கொன்கஸ்வத்த பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய இளைஞர் மீட்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிரிந்திஓய மஹல்ஒலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திஹாரிய பிரதேசத்தின் அத்தனகலு ஓய ஆற்றில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.