
வவுனியா மன்னார் வீதியில் நேற்று (17.04.2016) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கர வண்டியின் பின் பக்கமாக மோதியதில் துவிச்சக்கர வண்டியை ஓட்டிவந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன் நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர் ராமன் ராமலிங்கம் என்ற 57 வயது குடும்பஸ்தராவார்.
மோட்டர் சைக்கிலில் பயணித்தவர் பாதுகாப்புக் கவசத்தின் பட்டி அணியாது அதிக வேகத்தில் பயணித்த பொழுது தலைக்கவசம் காற்றில் தூக்கி ஏறிய முயன்ற சமயத்தில் தலைக்கவசத்தில் ஒரு கையை பிடித்தவாறு சென்று துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது மோதியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!






