
பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 14ம் திகதி பிறந்த 45 நாள் சிசுவை தாக்கி விட்டு தலைமறைவாகியிருந்த தந்தையை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 14ம் திகதி மது போதையில் வந்து தகாத வார்த்தைகளால் பேசி தன்னையும் தனது சிசுவையும் கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்ததாக சந்தேகநபரின் மனைவி கடந்த 15ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
தாக்கப்பட்ட சிசுவும் தாயும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (19) செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





