பண்டிகைக் காலத்தில் அதிகளவு எண்ணெய் உணவுகளை உண்டவரா நீங்கள் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

687

Sweet

தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் அதிகளவு எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுப் பண்டங்களை உட்கொண்டிருந்தால் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக புதுவருட பண்டிகைக் காலத்தில் அதிகளவு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு திண் பண்டங்களான பலகாரங்கள், கொகீஸ் போன்றவற்றை மக்கள் உட்கொள்கின்றனர்.

இவ்வாறு அதிகளவில் எண்ணெய் மற்றும் இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டவர்கள் அதற்கு பரிகாரமாக உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும் அல்லது உடலை வருத்தி வேலை செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

பண்டிகைக் காலத்தில் அதிகளவில் இனிப்பு சுவை அல்லது எண்ணெய் உணவுகளை உட்கொண்டவர்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நாள் ஒன்றுக்கு உடலை வருத்தி வேலை செய்யவோ அல்லது உடற் பயிற்சி செய்யவோ வேண்டுமென இலங்கையின் பிரபல்யமான போசாக்கு நிபுணத்துவ மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கொழும்பு ஊடகமொன்றின் ஊடாக கோரியுள்ளார்.

இனிப்பு சுவை மற்றும் எண்ணெய் தன்மையுடன் கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பலர் அதிகளவு உடலை வருத்தி வேலை செய்வதோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுவதோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உணவுப் பொருட்களை உட்கொண்டு எந்த வேலையயும் செய்யாமல் இருக்கக் கூடாது எனவும், உடலை வருத்தி வேலை செய்யாவிட்டால் நீரிழிவு போன்ற நோய்கள் தாக்கக் கூடும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளின் எந்தவொரு நேரத்திலேனும் குறைந்த பட்சம் அரை மணித்தியாலம் உடற்பயிற்சி அல்லது உடலை வருத்தி வேலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.