
அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும் இரத்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தின் பின்னர் சுப நேரத்தில், சுகாதார அமைச்சில் கடமைகளை ஆரம்பித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் இரத்த பரிசோதனை நடாத்தக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.ஆசிய பிராந்திய வலயத்தில் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் சுகாதாரத் துறை மேம்படுத்தப்படும்.நாட்டு மக்களுக்கு தரமான ஓர் மருத்துவ சேவையை வழங்க நடவடடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டில் தட்டுப்பாடு இன்றி அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் மருந்துப் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் சில அரசாங்க வைத்தியசாலைகளில் இரத்த பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் கிடையாது.தனியார் ஆய்வு கூடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த அறிக்கைகளை அரசாங்க வைத்தியசாலைகளில் சமர்ப்பிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





