வவுனியாவில் கணவனை கோடரியால் வெட்டிக் கொன்ற மனைவி : கோடரியுடன் பொலிஸில் சரண்!!

1102

 
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று இரவு வவுனியா – புபுதுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும், நேற்றைய தினமும் இவ்வாறு மது போதையில் சண்டையிடும்போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11 12 13 14