உலர விட்ட ஆடைகள் மழையில் நனையும் என்ற கவலையா? இனி அதற்கு இடமே இல்லை!!

567

clothesline2009

எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன் காரணமாக எந்தவொரு வேலையையும் இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கும் அளவிற்கு மனித வாழ்க்கை மாற்றம் கண்டுவருகிறது.

இதற்கு மகுடம் வைத்தால் போல் மற்றுமொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது இன்று வரைக்கும் ஆடைகளை தோய்த்து உலரவிடும்போது திடீரென மழை வந்து மீண்டும் அவற்றினை நனைத்து விடும் என்ற பயம் இறுதி வரைக்கும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக Omo நிறுவனம் Peggy எனப்படும் இலத்திரனியல் கிளிப்களை வடிவமைத்துள்ளது.இவற்றில் ஒளி உணரி (LightSensor), வெப்பநிலை உணரி (Teperature Sensor) என்பன காணப்படுவதுடன், WiFi தொழில்நுட்பத்தின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதனால் மழை வரும் நேரங்களில் ஸ்மார்ட் கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவலை அனுப்புகின்றது.மேலும் இதில் USB ஊடாக மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது இக் கிளிப் ஆனது சோதனைக் கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.