
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வர்ணனையாளர்கள் குழுவில் பணியாற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களோடு மஹேலவும் இணையவுள்ளார்.
தற்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர்களான இயன் பொத்தம், டேவிட் கொவர், நாஸர் ஹுசைன், அர்தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகியோர் வர்ணனையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் மஹேல வர்ணனை யாளராக இணை யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது.





