
உலகில் பல நாடுகளில் கடலுக்கடியில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் முதன்முறையாக இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே கடலுக்கடியில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.
508 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் 21 கி.மீ வரையிலான பாதை மட்டும் கடலுக்கடியில் அமைக்கப்படவுள்ளது. 97,636 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த இத்திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 81 சதவிகிதம் கடன் பெறப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கான கடன் ஒப்பந்தத்தின் படி மின் சாதனங்கள், சிக்னல் சாதனங்கள் உள்ளிட்டவைகள் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புல்லட் ரயில் தொடர்பாக ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாக உள்ளது. கடலுக்கு அடியிலான புல்லட் ரயில் சேவை திட்டம் கட்டுமான பணிகள் 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக இத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தானே கடற்பகுதி வழியாக அமைக்கப்படவுள்ள இந்த சேவை மூலம் தற்போது 7 மணி நேரத்தில் கடக்கும் 500கி.மீ தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கமுடியும்.





