எனக்குள் உலகம்..

1105

Budha

அமைதியும் மௌனமும்
உலகின் அழகிய விழிகளாகலாம்.

தூய்மையும் சுவாசமும்
பிராண வாயுவாகலாம்.

ஒற்றைக்கல் தீப ஒளி
அகல் விளக்காகலாம்.

இயற்கையின் பச்சையில்
இனிமை காணலாம்.

தெளிந்த நீர் போல்
கண்ணாடியாய் மனதைக் காணலாம்.

எனக்குள் உலகம்.
எனக்கேன் உலகம்.

-குமுதினி ரமணன்-