ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து.. 2 பேர் பலி: பிரேசிலில் பயங்கரம்!!

516

625.0.560.350.160.300.053.800.668.160.90

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையோரம் கட்டப்பட்ட மிதிவண்டி பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையை ஒட்டி மிதிவண்டி பாலம் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலம் இடிந்து விழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக பாலத்தில் பயணம் செய்த 2 பேர் இறந்துபோயினர். 3 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை மீட்க ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை.

எனினும் பெரிய அலைகள் வந்து மோதியதால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டபோதே துரு பிடித்த இரும்பினால் பாலத்தின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பாலத்தின் குறுகிய வளைவுகள் வாகன ஓட்டிகளுக்குஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ஜிகா வைரல் காரணமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் , தற்போது பாலம் இடிந்து விழுந்திருப்பது பிரேசில் அரசாங்கத்துக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.