இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாட்சியங்கள் தொடர்பான சட்டங்களும் ஒரு நூற்றாண்டு பழமையானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே நாட்டின் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.





