வவுனியாவில் ஆட்டைக் கடித்த நாயைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்!!

504

Dog

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் ஆடு ஒன்றைக் கடித்த குற்றத்திற்காக நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து காலையில் இருந்து அடுத்தநாள் காலை வரை தூக்கில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இச் சம்பவத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த வவுனியா நெற் வாசகர் ஒருவர் தொலைவில் இருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் ஐந்தறிவுள்ள விலங்குகளையும் பறவைகளையும் கொடுமைப்படுத்தும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சிலர் இனம்காணப்பட்டு தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.

இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இச் செய்தியை வெளியிடுகின்றோம்.

Dog - Copy