கடலில் மூழ்கி பல்கலை மாணவன் பலி!!

447

1 (6)

திருகோணமலை நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 4ம் வருட மாணவனே நேற்று (24) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 12 மாணவர்களுடன் நிலாவெளி – புறாமலை பகுதியில், குறித்த மாணவன் குளிக்கச் சென்றதாகவும் இதன்போது நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய மாணவனை அப் பகுதியில் உள்ள சுழியோடிகள் காப்பாற்றி நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.