அமேசன் இணையத்தளத்தின் புதிய சேவை!!

590

amazonlogo

உலகின் மிகப் பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது.

இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலோ அல்லது கொள்வனவு செய்யக்கூடிய வகையிலோ மென்பொருட்கள் மற்றும் வீடியோ கேம்களை வழங்கவுள்ளது.

புதிதாக வெளியாகும் மென்பொருட்கள், கேம்களை இதனூடு பெற்றுக்கொள்ள முடிவதுடன், 10GB கொள்ளளவுக்கு அண்மையான அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பு அளவுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் அறிமுகமாகும் இச்சேவையானது விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.