பாரதிய ஜனதாக் கட்சியில் இணைத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!!

536

Power Star

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசன் பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனை முன்னிட்டு பிரபலமான நடிக, நடிகையர் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் தற்போது பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசனின் அரசியல் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”உடன்பிறப்புகளே!உங்களுக்காக நான். உங்களுக்காகவே நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சீனிவாசன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்தவர்.

மேலும் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக சீனிவாசன் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இமான் அண்ணாச்சி, விந்தியா, செந்தில், நமீதா வரிசையில் பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்புவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.