
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய சோமர்செட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அசத்திய குமார் சங்கக்கார சதம் விளாசினார். அவர் 176 பந்துகளில் 24 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் உட்பட 171 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தவிர, தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 80 ஓட்டங்களையும், ஜாசன் ரோய் 85 ஓட்டங்களையும் குவித்தனர். இதனால் சர்ரே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு394 ஓட்டங்களை குவித்தது.





