
அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வழங்கப்பட்டுள்ள காலஎல்லைக்குள் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் மாதம் 25ம் திகதி காலை 09.00 மணி முதல் மே மாதம் 6ம் திகதி மாலை 04.00 மணி வரை இவ்வாறு அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைக்கும் பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ம் திகதியின் பின்னர் நாட்டிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றும் விஷேட வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க பாதுகாப்பு தரப்பு எதிர்பார்த்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கி பாவனையை குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.





