ஐந்து வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

587

CPT117336841_hd-878x494

கனடாவில் ஐந்தே வயதான சொந்த மகளை கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகமாடிய தந்தை மீது பொலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கனடாவில் Newfoundland and Labrador பகுதியை சேர்ந்த 37 வயது Trent Butt என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் Carbonear நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று தீயிக்கிரையானதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலை அடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அந்த நெருப்பில் சிக்கி ஐந்து வயதான சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. மேலும் சிறுமியின் தந்தை Trent Butt படுகாயங்களுடன் மருத்துவமனைக்குஎடுத்து செல்லப்பட்டார்.இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஒட்டுமொத்தமாக இது திட்டமிடப்பட்ட செயல் என்பதை உறுதிப்படுத்தும்படியான தடயங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் Butt வேண்டுமென்றே வீட்டிற்கு நெருப்பு வைத்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே சிறுமி Quinn Lorna-Kay புகைப்படத்தை சமூகவலை தளங்களில் பதிவேற்றி பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகமானவர்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.தொடர்ந்து Harbour Grace உதைப்பந்து வளாகத்தில் நாளை நடைபெறவிருக்கும் ஆராதனைகளுக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பு விடுத்துள்ளனர்.பொலிஸ் விசாரணைக்கு பின்னரே குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததன் பின்னணியும் குழந்தை பலியானதன் காரணமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.