மட்டக்களப்பு, கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பூர பாற்குடப் பவனி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இவ் உற்சவத்தின்போது காவடியும் மயிலாட்டமும் இடம்பெற்றன.
இன்று காலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குடப் பவனி திருகோணமலை வீதிவழியாக கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு உகந்த ஆடிப்பூர நட்சத்திரத்தில் பால் அபிஷேகம் நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.
(ரமணன்)











