
லைகா நிறுவனம் தற்போது கமல் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்கான விழாவில் நடிகர் சங்கத்ததுக்கு 1 கோடி நிதி காசோலையை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மஹாலிங்கம் இவர்களுடன் பிரபு, சிவகுமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.
விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் லைகா குழும தலைவர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.





