பரத் நடிக்கும் 555 படம் இன்று வெளியாகின்றது!!

462

555விஜய் நடிப்பில் உருவான தலைவா’படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினை கிளம்பியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தலைவா நேற்று வெளியாவதாக இருந்ததால் இயக்குனர் சசி இயக்கத்தில் பரத், சந்தானம் மற்றும் மிருத்திகா நடிக்கும் “ஐந்து ஐந்து ஐந்து” படத்தை ஆக.15ம் திகதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் தலைவா வெளியாவதில் தாமதம் ஏற்பட்டத்தையடுத்து இப்படத்தை இன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ளன. மேலும், பரத் இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.