அடங்காத மலிங்க : இலங்கை மருத்துவர் காரசார குற்றச்சாட்டு!!

497

Malinga

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்க தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் என்று எனக்கு புரியவில்லை. அந்த 6 மாத காலம் இன்னும் கூட முடிவடையவில்லை.

இருப்பினும் இது அவரது முடிவு, நான் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. அவர் எனது ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாத வரை நான் அவருக்கு அட்வைஸ் செய்ய முடியாது.

சமிந்த வாஸ் கூறி சச்சின் டெண்டுல்கர் கூட அவரது முதுகுவலிக்கு என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் மலிங்கா விடயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார்.