நடனம் ஆடச்சொன்னால் நடுக்கம் வருகிறது : சிவகார்த்திகேயன்!!

633

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நடனம் என்றால் நடுக்கம் வருமாம். ரஜினி முருகன் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

இது அவருடைய 11வது படம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

படங்களில் நடனம் ஆடிய அனுபவம் பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது, சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் நடனம் ஆடவேண்டும் என்றாலே நடுங்கி விடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை. பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும். மிகவும் சிரமப்பட்டு ஆடுவேன். இந்த அளவுக்கு வேலை வாங்குவார்.

என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்த நடனங்கள் மான் கராத்தே, ரஜினி முருகன் படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன என்று தெரிவித்தார்.