2016 சட்டமன்றத் தேர்தலில் புதிய வரலாறு படைத்த தமிழகம்!!

663

Election

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 22ம் திகதி முதல் ஏப்ரல் 29ம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி திகதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது, வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் குறித்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

அதில், தமிழக்கத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 7,046 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தல் வரலாற்றில் 7,046 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது

தமிழகத்தில் இதுவரைஅதிகபட்சமாக கடந்த 1989 சட்டமன்ற தோ்தலில் 2,968 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வரும் சட்டமன்ற தோ்தலில் போட்டியிட 779 பெண்கள் மற்றும் மூன்று திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில் இம்முறை தான் அதிக எண்ணிக்யைில் பெண்கள் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய, முதல்வா் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட அதிகபட்சமாக 60 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

எனினும், இதில் எத்தனை பேரின் மனுவை தோ்தல் ஆணையம் ஏற்க போகிறது என்பதை பெருத்திருந்து பார்ப்போம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்