போதைப் பொருளுடன் 8 நைஜீரியர்கள் உட்பட 10 பேர் கைது!!

433

arrest (1)

கொகேன் போதைப் பொருளுடன் நைஜீரியப் பிரஜைகள் எட்டுப் பேர் உட்பட 10 பேர், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராகம, கல்கிஸ்சை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வசமிருந்து 222 கிராம் 700 மில்லிகிராம் வரையான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.