கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தும் பிச்சையெடுத்த மூதாட்டி!!

1290

begging-for-money

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருப்பு இருந்தும், பிச்சை எடுத்து, மருத்துவ செலவுக்குகூட செலவழிக்க முடியாமல் உயிரைவிட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 70 வயதான கனகலதா என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் பிரேமநாராயண் கடந்த ஆண்டு இறந்தார். இந்த தம்பதியிக்கு குழந்தைகள் கிடையாது. கனகலதா ஒரு சிறிய அறையில் வசித்து வந்தார்.

இவரது நிலைமையை பார்த்து பரிதாபப்பட்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு உணவு, உடைகளை கொடுத்துஉதவி வந்தனர். இதேபோல் தினமும் பிச்சை எடுத்தே அவர் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில், 2 நாட்களாக கனகலதா வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது அவர்இறந்து கிடந்தார். பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கொண்டுஅவரது ஈம சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

கோயில் பூசாரியும், அப்பகுதியினரும் அவரது அறையை சுத்தம்செய்தபோது, பெட்டி ஒன்றில் பலவங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கானரசீதுகள் இருந்தன. அவற்றைகூட்டி பார்த்தபோது இரண்டு கோடிக்கு மேல்இருப்பது தெரிந்தது.அந்தந்த வங்கிகளிடம் அவற்றை அவர்கள் கொடுத்தனர். தனது இறப்புக்கு பணத்தை பெற அவர் யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை.இந்நிலையில் மறைந்த மூதாட்டியின் உறவினர் என கூறிகொண்டு சட்டீஸ்கரில் இருந்து ஒருவர் வங்கியில் உரிமை கோரியுள்ளார். ஆதாரங்களை வங்கிகள் கேட்டு வருகின்றன. ‘‘பணம்கைக்கு வந்ததும். எனது மாமா, மாமியின் நினைவாக கோயில் கட்டுவேன்’ என புதிதாக வந்த உறவினர் கூறியுள்ளார்.