காப்பாற்ற யாரும் வரவில்லை : பலாத்காரத்தில் இருந்து தப்பிய இளம் பெண் உருக்கம்!!

520

Abuse

பெங்களூரில் இளம்பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி பெங்களூரில் உள்ள கத்திரிகுப்பே மெயில் ரோட்டில் நடந்து வந்த ராதிகா என்ற இளம் வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் குண்டுகட்டாக தூக்கி சென்று பலாத்காரம் முயற்சி செய்துள்ளார்.

அந்நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பெண் கூச்சலிட்டும், யாரும் உதவிக்கு வரவில்லை, இதனைத்தொடர்ந்து மர்மநபரை தனது பலத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்த இளம்பெண், கத்திரிகுப்பே நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இளம் பெண்ணைமர்மநபர் தூக்கிசெல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், ஏப்ரல் 23ம் திகதி இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து ராதிகா இறங்குகிறார்.

பின்னர் அவர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும் போதுபின்னால் வரும் மர்மநபர், அவரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கி செல்கிறார். ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை அப்பகுதியில்வசிக்கும் சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.

மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் ராதிகாவை மர்மநபர் தூக்கி செல்வதை பார்த்துவிட்டு, அவரை காப்பாற்ற முயற்சிசெல்லாமல் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் இரவு 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் தான் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மர்மநபரை பிடிக்க தெற்கு மண்டல துணை கமிஷனர் லோகேஷ் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ‘

தனிப்படை பொலிசார் மர்மநபரை வலைவீசி தேடியதில், பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மர்மநபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து துணை பொலிஸ் கமிஷனர் லோகேஷ்குமார் பேசுகையில், ”இச்சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து உள்ளோம். அவனது பெயர் அக்ஷய். அவனே குற்றவாளி,” என்று கூறியுள்ளார்.

இற்கிடையில் அப்பெண், என்னை அந்நபர் கடத்தி செல்கையில் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, காப்பாற்றுவதற்காக யாரும் வரவில்லை என கூறியுள்ளார்.