
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொம்பே பதா கிராமத்தை சேர்ந்த 14 வயது பழங்குடியினத்து சிறுமி சொன்டாக்கே கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ம் தேதி அங்கு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்தபிறகு அவர் மண்டபத்தில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மயுர்முக்னே(19) என்பவர் சிறுமியை எழுப்பி அங்கிருந்து வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு வைத்து அவரது நண்பர்கள் இருவருடன் இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மயுரின் நண்பர்கள் ஹரிஷ் பாம்பே, உதய் பாம்பே ஆகியோர் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
முதலில் இது குறித்து யாரிடமும் கூறாத சிறுமி மறுநாள் காலை துணிவை வரவழைத்துக் கொண்டு பொலிசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மயுர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட 3 நபர்களும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.





