வெயிலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 219 ஆக உயர்வு! இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்!

585

Extreme-Weather-on-Increase-Mode-due-to-Climate-Change1

தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதுவரை, அம்மாநிலத்தில் வெயிலின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 41 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவுகிறது.

தெலுங்கானாவின், நல்கொண்டாவில் அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும், இங்கு மட்டும் 76 பேர் பலியானதாகவும், மஹ்பூப் நகரில் 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், கம்மம் மாவட்டங்களில் வெப்ப அலைகள் வீசுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும், நிலையில் இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது.