வவுனியா A9 வீதி புளியங்குளம் சந்தியில் புதிதாக அமைக்கபட்ட ஸ்ரீ லக்சுமி நாராயணன் ஆலயத்தின் நூதன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம் இன்று 04.05.2016 புதன்கிழமை காலை பத்துமணியளவில் சிவஸ்ரீ நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி கும்பாபிசேக நிகழ்வில் கும்பாபிசேகத்தை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மற்றும் திருப்பணிகளில் ஈடுபட்டோர் ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டனர்.






