
ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவராக உள்ள டோனி, அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்.
ஒரு காலத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக அஸ்வின் விளங்கினார். ஆனால் உலகக்கிண்ண தொடரில் இருந்தே டோனி அவரை புறக்கணித்து வருகிறார். தற்போது ஐபிஎல்தொடரிலும் இந்த நிலை தொடர்கிறது.
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் டோனி அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார். அதுவும் 17வது ஓவரில் தான் அவர் பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஆர்.பி.சிங், ஜம்பா, ரஜத் பாட்யா போன்றவர்கள் முழுமையாக 4 ஓவர்கள் வீசினர். ஆனால் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக மும்பை அணிக்கு எதிராக போட்டியிலும் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார்.
அப்போது புதுமுக வீரர் முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதால் அஸ்வினுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்ததாக டோனி விளக்கம் அளித்தார்.
இவரது மோதல் போக்கு தான் புனே அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.நேற்று பெங்களூர் அணியுடன் தோற்ற புனே அணி அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது.





