
மாதம்பே – செப்புகட்டிய பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடிய சிவில் பாதுகாப்பு காவலர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மாதம் 18ம் திகதி குறித்த தோட்டத்திலிருந்து 1407 தேங்காய்கள் திருடப்பட்டுள்ளதாக குறித்த தோட்டத்தின் உரிமையாளர் மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த மாதம்பே பொலிஸார், குறித்த தோட்டத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த மூன்று காவலர்களை கைது செய்துள்ளனர்.இதற்கு முதலும் குறித்த தென்னந்தோட்டத்திலிருந்து அதிகமான தேங்காய்கள் களவாடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.





