எரியும் கப்பலில் இருந்து கடலில் குதித்த பயணிகள்-அதிர்ச்சி வீடியோ வெளியானது!!

1214

E-tourist-ship

வியட்நாமில் கப்பல் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அதில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவியுள்ளது. ஆப்ரோடைட் என் உல்லாச கப்பல் வியட்நாமில் உள்ள ஹா லோங் பேயில் நின்று கொண்டிருந்தது. கப்பலில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நியூசிலாந்து, கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் கப்பல் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் வேறு வழியில்லாமல் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். அவர்கள் கடலில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் பரவியுள்ளது. கப்பலில் உள்ள சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டு அது பிற பகுதிகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்ததாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களை காப்பாற்ற கப்பல் ஊழியர்கள் முயற்சி எதுவும் செய்யவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.