
பீகார் சட்டமேலவை உறுப்பினரின் மகன் ராக்கி தொழிலதிபர் மகன் ஆதித்ய சச்தேவை நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் ஜனதா தளம் ஐக்கிய தலைவர் மனோரமா தேவியின் மகனான ராக்கி யாதவ், 2 நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றபோது, தனது காரை மற்றொரு கார் முந்தி செல்வதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
இதையடுத்து கோபத்தில், தனது பாதுகாவலரிடம் அந்த காரை துப்பாக்கியால் சுட்டு நிறுத்தும் படி கூறியுள்ளார். அதன்படி பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு குறித்த காரை நிறுத்தியுள்ளார்.இச்சம்பவத்தில் குறித்த காரை ஒட்டிய ஒரு முக்கிய தொழிலதிபரின் மகனான 19 வயதுடைய சச்தேவா, நடு ரோட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்கியுடன் சென்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டநிலையில் ராக்கியையும் நேற்று பொலிசார் கைது செய்தனர்.ராக்கி தந்தை பிண்டியாதவ் கூறுகையில், ராக்கியை, ச்சதேவா மற்றும்அவரது நண்பன் தாக்கியதாகவும், அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ராக்கியிடம் இருந்த தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்து அவர் சுட்டதாக கூறியுள்ளார்.





