வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயதுச் சிறுவன்

613

Boy

கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி என்ற நகருக்கு அருகில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக எரிந்துக்கொண்டு வருகிறது.

இந்த காட்டுத்தீ நகர மக்களையும் பாதித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை வீடு, உடமைகளை விட்டுவிட்டு அண்டை நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பிலிருந்து நிதியுதவி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ஓண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் டக் என்ற 5 வயது சிறுவனின் செயல் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.