
இரத்தினபுரி, எஹலியகொட நியனகொலதென்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முற்றத்தில் நின்றுகொன்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்குள்ளான அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.





