
நான் முதல்வரானால் நதிகள் அனைத்தையும் இணைப்பேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யமறுத்த கஞ்சாகருப்பு, திருச்செங்கோடு சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
சில அரசியல் கட்சிகள் என்னை பிரசாரத்திற்கு அழைத்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையை கருதி ஒதுங்கிவிட்டேன். பிரசாரத்துக்கு செல்லாத காரணம் இவர்களைப் பற்றி பேசுவதா அல்லது அவர்களைப் பற்றி பேசுவதா என்று யோசித்தே புத்தி மழுங்கிவிடும்.
கல்வி அறிவு இல்லாததால் என்னிடம் முகாமையாளராக பணியாற்றியவர் 3 ½கோடி ரூபாய் ஏமாற்றினார். படம் எடுப்பதாக சொல்லி வந்த ஒருவர் என்னை இரண்டரை கோடி ரூபாய் கடனாளியாக்கினார். கல்வி எல்லோருக்கும் கொடுக்கணும்.
நான் எந்த அரசியல் கட்சியாலாவது சேர வேண்டும் என்று கேட்டால் 4 நாள் முதலமைச்சர் பதவியை என்னிடம் தரும் கட்சியில் சேருவேன். முதல்வரானால் நதிகளை இணைப்பேன், கல்வி முழுவதும் இலவசம், மருத்துவம் இலவசம், தமிழகம் முழுவதும் பேருந்து பயணத்தை இலவசம் ஆக்குவேன். மாற்றம் என்று சொன்னால் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வரணும் என்று அவர் கூறினார்.





