சீமான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் தெரியுமா?

547

Seeman

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என போராடி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் அரசியலுக்கு வந்த நோக்கம் குறித்து கூறியுள்ளார்.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடலூர் கிளிஞ்சிகுப்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் பேசுகையில்,

இந்த தேர்தலை ஒரு மாற்றத்திற்கான அரசியலாக நாங்க பார்க்கின்றோம், இதுவரை நம்ம நிலத்தில் இருந்த அரசியலுக்கு, ஊழல் லஞ்சம் இல்லாத, பசி பஞ்சம் இல்லாத தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம் எப்படி வாழ்கின்றது, அந்த நாட்டில் ஊழல் லஞ்சம் இல்லாத நிர்வாக கட்டமைப்பு எப்படி இருக்கின்றது,

அது போல ஏன் நமது நாட்டை நாம் உயர்த்த முடியாது, மாற்ற முடியாது என்கிற எண்ணத்தில் தான் இந்த அரசியலை செய்ய வந்தோம்.

எந்த நம்பிக்கையில் என்றால், எங்களை பெற்றவர்கள், எங்களுடன் பிறந்தவர்கள் எங்களை கைவிட மாட்டீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான், உங்கள் தமிழ் பிள்ளைகள் நாங்கள் இந்த அரசியலுக்குவந்து இருக்கின்றோம் என சீமான் கூறியுள்ளார்.